Tag Archives: கணபதியும் குண்டலினியும்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | கணபதியும் குண்டலினியும் | Ganapathi and Kundalini

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

எண்ணிய எண்ணியாங்கு எய்துப் கண்ணுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல்பணிவோரே.

கணாதிபன் சன்னிதியில் தலையில் ஏன் குட்டிக் கொள்ளவேண்டும்?

மூலக்கனல் என்றும் சொல்லப்படும் சுஷும்னா நாடி, அடிவயிற்றின் கீழ் அதாவது முதுகு தண்டின் முடிவில், ஓம்கார ரூபமாய் அமைந்து செயல் படுகிறது. இதை தட்டி எழுப்பி, செயல்பட செய்து, மேல் நோக்கி ஸஹஸ்ரார மண்டலம் வரை செலுத்தி, சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே நிலை நிறுத்திக்கொண்டால், மனிதன் தன் நிலை மறந்து, பரமத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் எனவும், பேரானந்தத்தை அடைவான் என்றும் சொல்லப்படுகிறது.

இதை செயல்படுத்த மிக அதிக அளவு உஷ்ணம் உண்டு செய்யவேண்டும். இதற்கு மனதை ஒரே நிலையில் நிலை நிறுத்தி ஐக்கியப்படுத்த நெடும் நாம ஜப, தப, ஹோமாதிகள் செய்யவேண்டும் எனவும், அதெற்கெனவே நமது முன்னோர்கள், ரிஷிகள், சாஸ்திர விற்பன்னர்கள், தாவிர வர்க்கத்திலேயே மிக உஷ்ணமான அறுகு, எருக்கு, வன்னி பத்ரங்கள், விநாயகனுக்கு உகந்தது என வகுத்து, அகந்தை, ஆணவம் அழிந்தது என தலையில் குட்டிக்கொள்வதையும், தோப்புக்கரணம் போடுவதையும் வழக்கிலிருத்தினர்,

தோப்புக்கரணம் போடுவதால், மனித மூளையும் நரம்பு மண்டலமும் தூண்டப்பட்டு, அத்னால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது எங்கின்றன ஸாஸ்திரங்கள், ஆகையினாலேயே, முற்கால பள்ளிகளில், தவறு செய்யும் மாணாக்கர்களுக்கு, தோப்புக்கரணம் போடுவது தண்டனையாயிற்று.

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ண:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணத்யக்ஷா பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

என பக்தியுடன் பாராயணம் செய்ய, பாங்குடனே வாழ்ந்திடுவாய் பாரினிலே!

சுபம்