ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 5 | MUSINGS – 5

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம்

இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு பாவின் முதல் வரியின் முதல் எழுத்தும் காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான “க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்” என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இப்பா, இறைவியை மானஸ பூஜை முறையில், ஆராதிக்க உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதேபோல், தேவி ஸ்ரீ ரஜ-ராஜேஸ்வரி பதிகங்களிலும் இதுபோன்றே எழுத்து வரிசை காணப்படுகிறது. சங்கரர் மறைக்கவில்லையே, புஷ்ப மாலையாக அன்றோ அருளினார். அதன்பின் அதற்க்கும் மேல் ஒருபடி சென்று, த்ரிபுரசுந்தரி சன்னதி ஸ்தவத்தில், மனித குலம் உய்ய, அம்பிகையின் சான்னித்யத்தில் என்றும் குளிர்ந்திருக்க “ஷோடஸி வித்யா”யையுமன்றோ அருளினார்.

ஏதோ, அம்பாள் உபாஸகரான தீக்ஷிதர் மந்திரங்களை, அதுவும் ஷோடஸியை, மட்டுமல்லாது, தஸ மஹாவித்யயின் சாரத்தையும் ஆர்வ மிகுதியால் பொதுஜனங்களுக்கு சென்றடைய செய்தார் எனில், அவருக்கும் பல நூற்றாண்டுகள் முன்பே ஆதி சங்கரர், அம்பிகையால் அருளப்பட்ட ரஹஸ்ய, அதிஸய பலன் உடைய, ஆராதனை முறைகளைக்கூட ஸ்ரீ ஆதி சங்கரரும், ஸ்ரீ தீக்ஷிதரும், நம் எல்லோரும் பயன் அடைய விட்டுச்சென்றனர். ஆயின், இன்றோ வைதீகம் வியாபாரமாகிவிட்டது தான் வருத்தத்திற்குறியது.

இதன் பலன், அரை குறையாக ஆஸரணை செய்யும் ஆச்சார்யர்களுக்கு, அரை குறையான சந்ததிகள், அல்லது சந்ததி இல்லாமை, வாக் ஸ்தம்பனம், மற்றும் இன்னம் இதர சொல்ல இயலாத வகையில் பலன்கள்.

இதன் பயனாக ஆலயங்களில் இறைவனை வழிபடுவோரும், “24 மணி நேரமும் கோவிலே என்று கிடக்கும் அர்ச்சகரின் கோரிக்கையயே ஆண்டவன் என்ன என்று கேட்கவில்லை, நம் கோரிக்கையையா கேட்கப்போகிறார்” என்று எண்ணி, அசட்டையாகி விடுகின்றனர். இதுவும், நமது சமூக சீர்கேட்டிற்கு ஒரு காரணம். அர்ச்சகர் முறையாக, விதிப்படி வழிபட்டிருந்தால் அன்றோ இறைவனும், அவன் கூற்றுப்படி, அவ்வழிபாட்டின் பயனை அருளியிருப்பான்!

தயை கூர்ந்து சிந்திக்கவும்; க்ரந்த கர்த்தா ஒரு பாமாலையை படைத்து, அதன் பலனை அனுபவிக்காமல் அதை உலகிற்கு தெரிவிக்கவில்லை. நன்றாக பலனை அனுபவித்து, பின்னரே உலகிற்கு தெரிவித்தனர். உதாரணம் அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம். இன்றும் கனகதாரா ஸ்தோத்திரத்தை முறையோடும், ஸ்ரத்தையோடும் அனுஷ்டான முறையில் அனுசரித்து பலனடைந்தவர்கள் ஏராளம்.

பொதுவாக, பாமர மக்கள், ஏன் நாம் கூட, இறைவனுக்கு வழிபாடு நடத்தி, இறைவனிடம் நமது இன்னல்களை மண்டித்து ஆராதனை செய்தவுடன், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். இது மனித இயல்பு. ஆயின், வேத வித்துக்கள் என்றும், வித்வான் என்றும், ஆச்சார்யர் என்றும் சமூகத்தில் அந்தஸ்துடைய ஆச்சார்யர்களே, சாபக்ரஸ்தராகும் பொழுது, சமூகம் இறையாண்மையை மறப்பது வெறுப்பது முறையே அன்றோ.

ஆச்சார்ய வர்கம், இதன் பிறகாவது, காலை, மாலை வேளைகளில், ஆலயம் புகுமுன்பு, தம் தமது இல்லங்களில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்களை முழுமையாக நிறைவேற்றி, காயா, வாச்சா, மனஸா, சுத்தியுடன் ஆலய பிரவேஸம் செய்து, மூலவரையும், பரிவார தேவதைகளையும் முறையாக ஆராதித்து, வரும் பக்தர்களுக்கும், தமக்கும், தம் வர்கத்திற்கும் அருள் சேர்க்க முயற்ச்சிப்பார்களா?

இந்த ஆதங்கத்திற்கு காரணம், ஸர்வருக்கும் பயன்படவேண்டிய மந்திரங்களை, நமது முன்னோர்கள் எழிமையான ஸ்லோகங்களாக, எழிலாக, வெரும் ஸ்தோத்திரங்களாக, ஸ்ரீ வித்யாவிற்கே உண்டான கடின அனுஷ்டானங்கள் இல்லாமல் அமைத்துக் கொடுத்தும் இன்னமும் அவை வைதீக வியாபார வேத வித்துக்களைக்கூட சென்று அடையவில்லையே என்பது தான். அப்படி அடைந்திருந்தால், அவர்களும் பயனுற்று, அகிலமும் பயனுற முயற்ச்சிப்பர் அல்லவா! என்ற எண்ணமே. காக்கப்படவேண்டிய ரஹஸ்யங்கள் காக்கப்படட்டும், அனுஷ்டிக்கப்பட வேண்டிய அனுஷ்டானங்கள் அனுஷ்டிக்கப்படட்டும். அனுபவித்து ஆனந்திக்க வேண்டியவைகள் அனுபவிக்கப்படட்டும்.

‘ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்’

1.ல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யேவிராஜன்மணி
த்வீபேகல்பகவாடிகாபரிவ்ருதேகாதம்பவாட்யுஜ்வலேமி |
ரத்னஸ்தம்பஸஹஸ்ரநிர்மிதஸபாமத்யேவிமாநோத்தமே
சிந்தாரத்னவிநிர்மிதம்ஜநதிதேஸிம்ஹாஸநம்பாவயேமிமி ||

2.ணாங்காநலபர்னுமண்டலலஸத்ஸ்ரீசக்ரமத்யேஸ்திதாம்
பாலோர்கத்யுதிபாஸுராமகரதலை:பாசாங்குசௌபிப்ரதீம் |
சாபம்பாணுமபிப்ரஸந்நவதநாம்கௌஸும்பவஸ்த்ரான்விதாம்
தாம்த்வாம்சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம்பாவயே ||

3.சாநாதிபதம்சிவைகபலகம்ரத்னாஸனம்தேசுபம்
பாத்யம்குங்குமசந்தனாதிபரிதைரர்க்யம்ஸரத்னாக்ஷதை: |
சுத்தைராசமநீயகம்தவஜலைர்பக்த்யாமயாகல்பிதம்
காருண்யாம்ருதவாரிதேததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

4.க்ஷ்யேயோகிஜநஸ்யரக்ஷிதஜகத்ஜாலேவிசாலேக்ஷணே
ப்ராலேயாம்புபடீரகுங்குமலஸத்கர்பூரமிச்ரோதகை: |
கோக்ஷீரைரபிநாலிகேரஸலிலை:சுத்தோதகைர்மந்த்ரிதை:
ஸ்நானம்தேவிதியாமயை ததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

5.ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோஹேமாசலாத்ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம்கௌஸும்பவர்ணாம்சுகம் |
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ரமமலம்ஸெளவர்ணதந்தூத்பவம்
தத்தம்தேவிதியாமயைத்தகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

6.ம்ஸைரப்யதிலோபநீயகமநேஹாராவலீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதிஹீரபூரிததரேஹேமாங்கதேகங்கணே ||
மஞ்ஜீரௌமணிகுண்டலேமகுடமப்யர்தேந்துசூடாமணிம்
நாஸாமெனக்திகம்அங்குலீயகடகௌகாஞ்சீமபிஸ்வீகுரு ||

7.ர்வாங்கேகனஸாரகுங்குமகனஸ்ரீகந்தபங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம்பாலபலகேகோரோசநாபத்ரகம்மி |
கண்டாகர்சனமண்டலேநயநயோர்த்வ்யாஞ்ஜநம்தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபிபங்கம்அமலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

8.ல்ஹாரோத்பலமல்லிகாமருவகை:ஸெளவர்ணபங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர்மந்தாரகுந்தாதிபி: |
கேதக்யாதரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜேமாலிகா:
ஸங்கல்பேநஸமர்பயாமிவரதேஸந்துஷ்டயேக்ருஹ்யதாம்மிமி ||

9.ந்தாரம்மதநஸ்யநந்தயஸியைரங்கைரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரை:பத்நாஸிதஸ்யாசம் |
தாநீமாநிதவாம்பகோமலதராண்யாமோதலீலாக்ருஹா
ண்யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர்துபைரஹம்தூபயேமிமி ||

10.க்ஷ்மீமுஜ்வலயாமிரத்னநிவஹோத்பாஸ்வந்தரேமந்திரே
மாலாரூபவிலம்பிதைர்மணிமயஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: |
சித்ரைர்ஹாடகபுத்ரிகாகரத்ருதைர்கவ்யைர்க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணைர்தியாகிரிஸுதேஸந்துஷ்டயேகல்பதாம் ||

11.ஹ்ரீங்காரேச்வரிதப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்,
திவ்யான்னம்க்ருதஸ¨பசாகபரிதம்சித்ரான்னபேதம்ததா |
துக்தான்னம்மதுசர்கராததியுதம்மாணிக்யயாத்ரேஸ்திதம்
மாஷாபூபஸஹஸ்ரமம்பஸகலம்நைவேத்யமாவேதயே ||

12.ச்சாயைர்வரகேதகீதலருசாதாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்திமதுரை:கர்பூரகண்டோஜ்வலை: |
முக்தாசூர்ணவிராஜிதைர்பகுவிதைர்வக்த்ராம்புஜாமோதனை:
பூரணாரத்னகலாசிகாதவமுதேந்யஸ்தாபுரஸ்தாதுமே ||

13.ன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரேமௌக்திகசித்ரபங்க்திவிலஸத்கர்பூரதீபாலிபி: |
தத்தத்தாலம்ருதங்ககீதஸஹிதம்ந்ருத்யத்பதாம்போருஹம்
மந்த்ராராதனபூர்வகம்ஸுவிஹிதம்நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி ||

14.க்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்
இந்த்ராணீரதிஸ்சசாமரவரேதத்தேஸ்வயம்பாரதீ |
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம்ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிகஸாத்விகை:ஸ்புடதரம்மாதஸ்தாகர்ண்யதாம்மிமி ||

15.ஹ்ரீங்காரத்ரயஸம்புடேநமனுநோபாஸ்யேத்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோதவஸ்துதிவிதௌகோவாக்ஷமேதாம்பிகே |
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம்ஸஞ்சாரஏவாஸ்துதே
ஸம்வேசோநமஸ:ஸஹஸ்ரமகிலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

16.ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயாகிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம்ஸுநியதஸ்தஸ்யாமலம்ஸ்யான்மந: |
சித்தாம்போருஹமண்டபேகிரிஸுதாந்ருத்தம்விதத்தேரஸாத்
வாணீவக்த்ரஸரோருஹேஜலதிஜாகேஹேஜகன்மங்களா ||

17.இதிகிரிவரபுத்ரீபாதராஜீவபூஷா
புவனமமலயந்தீ¨க்திஸெளரப்யஸாரை: |
சிவபதமகரந்தஸ்யந்திநீயம்நிபந்தா
மதயதுகவிப்ருங்கான்மாத்ருகாபுஷ்பமாலைமிமி ||

மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று.

மேற்கண்ட ஸ்தோத்திர பாராயண பலன் இங்கே, இது இந்த ஸ்லோகத்திலேயே 16-ஆம் பத்தியில் “பல ஸ்ருதியாக” உள்ளது.

“எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீ தேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், நாவில், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.”

எந்த பக்தனும், இதைவிட வேறொன்றும் இறைவனிடம் யாசிக்கப் போவதில்லையே!

குண்டலினி யோகத்தில் கிட்டும் அனைத்தும், பக்திமார்கத்தில் கிட்டிடும்போது, அல்லது, சாதாரணமான முறையில், உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் எல்லாவற்றையும் அடைய வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் கடினமான வழிகளை தேர்வு செய்யவேண்டும்?

எளிய பக்தி மார்கம், மந்திர மார்கம், மற்றும் யந்திர தந்திர மார்கத்திற்கே, தேர்ச்சி பெற்ற குருவானவர், மிக மிக அவசியம். ஆரம்பத்தில், சாதாரண நிலையில், அனுஷ்டானங்களில் தேர்ச்சி பெற்றவர் குருவாக இருந்தால் போதும், இரண்டாவது நிலையிலேயே, தேர்ச்சி பெற்ற உபாஸகர், அதுவும் நீங்கள் தேர்வு செய்த தேவதா மூர்த்தியின் உபாஸகர் கண்டிப்பாகத் தேவை. இனி மூன்றாம் நிலையைப் பற்றியும், கடினமான நான்காம் நிலை பற்றியும் விளக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன்.

இனியும் ஒரு விஷயம். சிரம் தேயும், ராஜ்யம் தேயும், ந தேயா ஷோடஸாக்ஷரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யான் அறிந்தவரை அதன் அர்த்தமாவது, ஷொடஸாக்ஷரியை உபாஸனை முறையை உபதேஸிக்க, அம்பிகையை அகல வேரு யாருக்கும் அதிகாரமில்லை. ஆயின், இது தான் ஷோடஸி, அம்பாளின் மிக ரஹஸ்ய மந்திரம், இதன் உபாஸனை முறைகளை அம்பிகையேதான் உபதேஸிப்பாள், அதற்கு தகுதியாக வேண்டுமென்றால், பஞ்சதஸியை உபாஸித்து அதில் சித்திபெற்று, ஷோடஸியை அம்பாளின் அனுக்ரஹத்தால் அடைவாயாக என்றல்லாவா பொருள் கொள்ளவேண்டும் அப்படி பொருள் கொண்டதால் தான், ஆதி சங்கரரிலிருந்து தீக்ஷிதர் வரை அந்த அத்புதமான மந்திரத்தை வெளியிட்டார்கள் – உபதேசிக்கவில்லையே? முறையாக உபாஸனை செய், உன்னத நிலையடைவாய் என்றனரே தவிர.

 

சுபம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s