ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 3 | MUSINGS – 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

நமது ஹிந்து மதம் மிகவும் புராதனமானது என்கிறோம். அதை கட்டிக்காக்க நாம் என்ன செய்தோம்? உண்மையை உள்ளதை மறைப்பது மட்டுமே அன்றோ!

நமது மதம் புராதனமானதினாலேயே நமக்கு, பல ஸாதகர்கள், பல காலகட்டங்களில் செய்த ஸாதனைகளின் பயனாக, மொழி – ஆம் மொழி, தமிழாகட்டும், ஸமஸ்க்ருதமாகட்டும் உருவானது. அதன் மூலம், பல பல விஷயங்கள், வாய் மொழியாக, வழி வழியாக நம்மை வந்தடைந்தது, அதற்கும் முன், குருவானவர், தனது தவ வலிமையால், இன்று ஆங்கிலத்தில் TELEPATHY என்று அறியப்படுகின்ற எண்ண அலைகள் பரிமாற்றம் மூலமாகவே தமது எண்ணங்களை தமது சிஷ்ய பரிவாரத்திற்கு உணர்த்தியுள்ளனர். உதாரணம், குரு தக்ஷிணாமூர்த்தி மவுனமாகவே வேதம் உணர்த்தியது. ஆப்படி மவுனமாக வேதம் உறைத்தவர், கும்ப சம்பவராம் அகத்திய முனிக்கு – வடக்கிலிருந்து, தெற்கிற்கு புலம் பெயர்ந்தவருக்கு – தமிழ் மொழியை உபதேஸிக்க காரணம் எதுவாக இருக்க முடியும்? யாராவது விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

அந்த கும்ப முனியார், தமிழுக்கென இலக்கியம், தமிழ் லிபி என்று எவ்வளவோ தமிழ் மொழிக்கும் தமிழ் மட்டும் அறிந்தோருக்கும் வேதம் விரிய வழி வகுக்கவில்லையா?

பின்னர் அவரே எழுத்தும், உச்சரிப்பும் பலனும் என மந்திரமாக தமிழையும் மாற்றவில்லையா?

திருமூலர் திருமந்திரமும், சொல்லும், பொருளும், எழுத்தும், அதன் இயல்பையும், உபயோகத்தையும் தமிழில் தானே விவரித்திருக்கிறது!

பர சிவனின் ஞானக்கண்ணின் ஞானப்பொறியாம், தக்ஷிண மூர்த்தி மூலமாக காமேஷ்வரனே தமிழை உருவாக்கி அகிலத்தில் அரங்கேற்றினார் என்றல்லவா பொருள் கொள்ளவேண்டும். இந்த அளவிர்க்கு தமிழின் மீதும் தமிழ் மக்களின் மீதும் வாஞ்சையுள்ள இறைவனின் கருணை எல்லோரையும் சென்று அடையவேண்டாமா!

உதாரணத்திற்க்கு: வாலை வணக்கம் எனும் பாலாம்பிகையின் தமிழ் செய்யுளில் முதல் பகுதியிலேயே, ஐம் க்லீம் சௌ என்ற பாலா பீஜம் உள்ளது, அதன் ந்யாசமும் உள்ளது. இதயத்தில் ஐம் என்றும், புருவ மத்தியில் க்லீம் என்றும், சிரஸில் சௌ எனவும் குறிப்பிட்டுள்ளதை காண்க.

“ஐந்”தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்

உந்தனித யத்திலுயர

இந்திரவில் சிந்துமொளி இத”கிலீங்” காரமென

இருபுருவ நடுவில்வளர

சந்திரனின் பாலொளிச் “சௌ”மியத் தண்சுடர்

சுந்தரிநின் சிரசில்விரிய

வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு

வாலைதிரி புரையழகியே!

இரண்டாவதில் அம்மையின் யந்திரம் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை

ஆதிபரைகோணமொன்றின்

நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக

நங்கைசிவ மங்கைபரையே

மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்

மங்கலை சிவானந்தியே

இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு

வாலைதிரி புரையழகியே!

இந்த வாலை வணக்கப்பாடலின் பல ஸ்ருதி என்னவெனில்,

ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்

அருளொளிருமழகுமுகமும்

தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்

தெளிவொடுன்னுபவர்வாழ்வில்

நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி

ஞானமும்நலமும்வளரும்

ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு

வாலைதிரிபுரையழகியே!

இதுபோன்று எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: | ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s