ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Sri Adhiparasakthi Peetam | எச்சரிக்கை | Caution

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி காமாக்ஷி அம்மன்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

இந்த வலைப்பூவில் பலவகையான மந்திரங்களும், தந்திரங்களும், அதற்குண்டான யந்திரங்களும் விஸ்தாரமாக உறைக்கப்பட இருக்கின்றன.

இவை எல்லாம், நாம் உய்ய நம் முன்னோர்கள் கண்டறிந்த மார்கங்களும், விதிமுறைகளுமே ஆகும்.

இவையெல்லாம், குருவானவர் மூலம் உபதேஸம் பெற்றே அனுஷ்டிக்கப்படவேண்டியது.

சில ஸ்தோத்திரங்கள், பொது அல்லது கூட்டு வழிபாட்டில் அடங்கும்.

பொது என்பது, யார் வேண்டுமானாலும், நிபந்தனையின்றி பாராயணம் செய்யலாம்.

கூட்டு என்பது தேவ தேவி ஸன்னதியில் கூட்டாக பாராயணம் செய்யலாம், அப்படி செய்யும்போது, எந்த தேவ தேவி ஸன்னதியில் பாராயணம் செய்கிறீர்களோ, அந்த மூலமே, குருவாகவும், தெய்வமாகவும் இருந்து அனுக்ரஹிக்கும்.

குருமூலம் என்பது எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

உதாரணத்திற்கு: – ஓம் என்பது ப்ரணவமே சந்தேகமில்லாமல். அந்த “ஓம்” ந்யாஸிக்கும் பொழுது நமது அங்கத்தில் ஒரு பாகத்தில் ந்யாஸிக்கிறோம். பாராயணத்தின்போது, வேறு இடத்திலும், அதே ஸமயம் மந்திர தந்திரத்தின்போது அதே ஓம் வேறு இடத்தின் பலனையும் நல்குகிறது.

ஸமஸ்க்ருத மொழியில் மட்டுமே மந்திரங்கள் உள்ளன என எண்ணக்கூடாது. தமிழின் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும், முறையாக கையாண்டால், அதிசய, அற்புத பலன் விளைவிப்பவை – நம்ப முடியவில்லை அல்லவா?

குண்டலிநி சக்தியைப்பற்றி விவரித்திருந்தாலும், அவற்றை முழுமையாக, லொகக்ஷேமம் கருதி வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவற்றையெல்லாம் விளக்குவதற்கும் அனுபவ உண்மைகளை எடுத்துறைப்பதற்கு மட்டுமே, இவற்றையெல்லாம் இங்கு பதிவிடுகிறேன்.

இதைக்கண்ணுரும் அன்பர்கள், இவ்வலையில் காணும் மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: | ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s