ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும் | Sri Lalitha Sahasram & Kundalini Yogam

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி லலிதாம்பிகை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

ஸ்ரீ லலிதாம்பிகை

இவ்வலைப்பூவை ஆரம்பித்தபோது, அம்பிகையின் ஆராதனைக்கும், குண்டலினி யோகத்திற்கும் உள்ள தொடர்பையும், அந்த குண்டலினி யோகம் மூலம் அல்லது அம்பிகையை ஆராதிப்பதன் மூலம், இறையருளும், குண்டலினி எழுச்சியுரும், முறைகளையும், அதனால் உடல் ரீதியாக, உள ரீதியாக, மற்றும் இந்த லோகத்தில் பணம், பொருள், புகழ், பதவியோடு, அவ்வுலகில் அம்மையின் திருப்பாத கமல நிழலில் நீங்கா இடம் பெறும் வழிகளை எடுத்துறைக்க எண்ணியிருந்தேன், இறைவியின் சித்தம் வேறாக உளது போலும்.

அடுத்த பதிவு, சௌபாக்ய மந்த்ர அனுஷ்டானத்திற்கு சென்றுவிட்டது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஸ்லோகம் 36 முதல் 40 முடிய, அம்மையை குண்டலினி ரூபிண்யையாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. “ஓம் குண்டலினி ரூபிண்யை நம:” அந்த ஐந்து ஸ்லொகங்கள் இவை:

மூலமந்த்ராத்மிகா, மூலகூடத்ரய களேபரா |
குலாம்ருதைக ரசிகா, குலஸங்கேத பாலினி || – 36

குலாங்கனா குலாந்தஸ்தா, கௌலினி குலயோகினி
அகுலா சமயாந்தஸ்தா ஸமயாச்சார தத்பரா || – 37

மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதினி |
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதினி || – 38

ஆக்ஞாசக்ராந்தராளஸ்தா ருத்ரக்ரந்தி விபேதினி |
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி வர்ஷிணி – 39

தடில்லதா ஸமருசி: ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாஸக்தி குண்டலினி பிஸதந்து தனீயசி || – 40

இன்றைய விஞ்ஞானம், மனித உடல் மற்றும் ரோகவியலில், ஒட்டுண்ணிகளாலும், தேய்மானங்களினாலும், உடலில் அணுக்கூறு மாறுவதாலேயே வியாதிகள் உருவெடுப்பதாக கூறுகின்றன.

ஆனால், அன்றய ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை கவனித்தோமெனில், அம்பிகை சர்வ ரோகஹர சக்ரேஷ்வரியாகவும், சர்வ ரோக சமனியாகவும், சர்வ ஐஸ்வர்யகரியாகவும் கூறப்பட்டுள்ளது. அப்பலனை பெறுவதற்கு இடப்பட்டுள்ள ஒரே நிபந்தனை “ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்”. அப்படியென்றால், அம்பிகையை, விதிப்படி ஆராதிப்பின், நம்மை பிணிகளிலிருந்தும், முப்பிலிருந்தும், விடுவித்து, இவ்வுலகில் நாம் வாழ தேவையானவற்றையும் அருளுவாள் என்று தானே பொருள்.

சிறிது சிந்திப்போம்.

சக்கிரங்களும் செயல்பாடும், அவற்றிற்குள்ள தொடர்பையும் கவனித்தோமெனில், சக்கிரம் என்று அறியப்படுகின்ற உயிர் நிலைகளின் குறைபாடே, வியாதிகளுக்கு காரணமாகிறது என அறுதியிட்டு கூறலாம். உயிர் நிலைகள் உறுதியுடனிருந்தால் வியாதி நம்மை அண்டாது. இதை, விஞ்ஞானம், நோய் எதிர்ப்பு சக்தி என்கிறது. உயிர் நிலைகளின் உறுதி குறைபாடு, நம்மை வியாதிஸ்தர்களாக்குகிறது என புலப்படுகிறது அல்லவா! விஞ்ஞானம் கூறும் ஒட்டுண்ணிகள் எங்கும் எப்பொழுதும் வியாபித்தே இருக்கின்றன, ஆயின் சிலரை மட்டுமே தாக்குகிறது. எல்லோரையும், எல்லா சமயத்திலும் தாக்குவதில்லை. அதுபோலவே தான் எதிர்பாரா இன்னல்களான ஆக்சிடன்ட் போன்றவையும்.

சில எதிர்பாரா இன்னல்கள், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்குகின்றன. (உ). ஒரு பேருந்து கவிழ்ந்தது என செய்தித்தாள் செய்தி. அதில் பலர் பலி அல்லது காயம் என்று பதிவிட்டிருக்கிறார்கள், எனில், அவர்களது பூர்வ ஜன்ம அல்லது விதிப்படி (அ) ஜாதக கணிப்பில் சற்று ஏரக்குறைய அந்த சமயத்தில் அவர்களுக்கு கண்டம் என பொருள் படும்படியான கிரக அமைப்பு இருந்ததை நான் பல முறை கண்டுள்ளேன், வியந்துள்ளேன்.

அதன் காண், அம்பிகையை அவளுக்கான விதிமுறைப்படி ஆராதிப்போம், அதன் மூலமாக, நமது உயிர் நிலைகளான குண்டலினி சக்கிரங்களை இயன்றவரை மாசற்றதாக்கி, அதன் பலனாக நோயின்றி எல்லா நலனும் பெற்று பெருவாழ்வு வாழ முயல்வோமாக.

—இன்னமும் வரும்

சுபம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s