ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 1 | JALPAM – 1

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

மூல ஆதாரம் – மூலாதரம்

மூச்சின் பயிற்சியை முழுவதுமாக வென்ற பின், அடுத்த நிலை, நமது உடலிலுள்ள உயிர் ஆதாரங்களை இயக்குவது. (மூச்சு மந்திரமாவதும், மூச்சு மந்தி – ஈரமாவதும் இங்கிருந்தே)

முதலாவது ஆதாரம், நாம் இருப்பதற்கு, நிற்பதற்கு, நடப்பதிற்கு, உண்ணுவதற்கு மற்றும் உறங்குவதற்கு நமக்கெல்லாம் ஒரு இருப்பிடம் தேவை. அப்படிப்பட்ட இடத்தை நாம் பூமி என்றழைக்கிறோம் அன்றோ!.  அதுபோல் நமது உடல் நிற்க முதுகுத்தண்டு உதவுகிறது, அதன் கீழ் முனையில் உள்ளதே மூலாதரம் எனும் உயிர் நாடியாகும். இந்த உயிர் நாடியை மூலாதார சக்கிரம் என்றும் சொல்வர். இதை தூண்டுவதற்கு உண்டான ஒலி “லம்” ஆகும்.

நாம் தேவ தேவிகளை, மனதில் நினைத்து ஆராதிக்கும்பொழுது, நாம் சொல்லும் மந்திரம் “லம் – ப்ருத்வீ தத்வாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி / பரிகல்பயாமி”. இந்த இடத்திற்கு அதிபதியாக குறிப்பிடுவது வினாயகரை, அதற்குரிய மந்திரம் “லம் – லம்போதராய நம:”  இங்கு சிறிது சிந்திக்க வேண்டுகிறேன், கந்தம் என்பது சந்தணத்தையும், நல்ல மணமுள்ள பொருளையும் குறிக்கும்.  வாசனை திரவியங்கள் இங்கு ஏன் சமர்ப்பிக்கப் படுகின்றன?

வினாயகன் எப்படி வினைகளை அகற்றுகிறானோ, அதுபோல் இந்த பகுதி தூண்டப்பட்டால், பணிகள் யாவும் பிணியின்றி, இடையூரின்றி நடந்தேரும் என்பது உண்மை.

இந்த சக்கிரம் வலுவிழந்தால், கீழ் முதுகு வலி முதல் ஆசன வாய் புற்று நோய் வரை வரும்.

-தொடர்கிறது

சுபம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s