ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | மாந்த்ரீகம் – ஓர் அனுபவம் | An Experience.

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

மாரண மாந்திரீகம்

பல வருடங்களுக்கு முன், தாராபுரம் சென்றிருந்த பொழுது, அருகே இருந்த மலை மீது ஒரு தெளிந்தவரை சந்திக்க நேர்ந்தது.  அவரது குடிலுக்கு முன் பலர் காத்திருந்தனர், அவரிடம் அருள் வாக்கு கேட்க!

கலைந்த வெளுத்த முடியும், தாடியும், உலர்ந்த உடலும், தீக்ஷண்யமான கண்களும், கந்தலான ஒரு வேட்டியோடு ஒருவர் அந்த குடிலினின்றும் வெளிப்பட்டார்.  அருகே இருந்த கல்லின் மீதமர்ந்து ஒவ்வொருவரையாக, பெயர் கூறி அழைத்தார் – அவருக்கு, வெகு தூரத்திலிருந்து வந்திருந்த இவர்கள் பெயர் எப்படி தெரிந்தது என இன்றுவரை, யான் அறியேன் – அவர்களும் அருகே சென்றனர், முதியவர், எதையோ கூற கேட்டவர்களும், அவரை தாழ் பணிந்து விடை பெற்றனர்.

(கவனிக்க: அருகில் சென்றவர்கள் எதையும் கூற யாம் கேட்கவில்லை, முதியோரே, பெயர், அவர் வந்த தேவை அறிந்து அத்தேவைக்கு உதவினார்)

ஒரு சிலருக்கு மட்டும் தனது பையிலிருந்து எதையோ எடுத்து கொடுத்தார்.  பின்னர் தான் அது விபூதி என தெரிந்தது. சிலருக்கு சில மூலிகை இலைகளை கொடுத்தார், இன்னும் சிலருக்கு துளசியும் மற்றவர்களுக்கு வில்வ இலையும் கொடுத்தார்.

வயதில் மிக இளையவனான நான், ஆர்வம் அதிகமாக, அவரருகில் செல்லமுயல, அருகிலிருப்பவர்கள் தடுத்தனர். எப்படியோ தட்டு தடுமாரி அவர் பின்புறம் இருந்த கல் மீது அமர்ந்தேன், அவர் உரையாடுவது ஓரளவு கேட்டது. அவர் ஒருவரிடம் கூறியது –

”சமூகத்தில் மூன்று விஷயங்களுக்கு மாந்திரீகத்தில் இடமில்லை. ஒன்று ராஜாங்கம். ஒரு ராஜாங்கத்திற்கு மாந்திரீகம் செய்ய இயலாது. இரண்டாவது, மகான், ஞானி, துறவி இவர்களுக்கு எதிராக மாந்திரீகம் செய்ய இயலாது. மூன்றாவது, குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் பத்தினித் தன்மையில் குறையாமல் ஞான நிலையில் உயர்ந்தவராகவும் உள்ள பெண்கள். இவர்களைத் தவிர மற்றவர்களில், பாவிகளுக்கே மாந்திரீகம் முதலில் பலிக்கும். அதிலும் குறிப்பாக ஒருவரது ஜோதிட அமைப்பில் மாந்திரீகத்தால் மரணமோ, பாதிப்போ நிகழ வேண்டும் எனும் அம்சம் இருந்தால் மட்டுமே – அத்தகைய நபர்களுக்கு மட்டுமே – மாரண மாந்திரீகம் பலிக்கும். ஜாதக அம்சத்தில் மாந்திரீக தோஷம் இல்லாத நிலையில் புண்ணியங்கள் நிறைந்தவராக அந்த ஆத்மா இருந்தால், மாரண மாந்திரீகம் என்றும் எடுபடாது.” என்றார்.

இன்று எனக்கு விளங்குகிறது, உங்களுக்கு?

சுபம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s