ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் | JALPAM

ஜபத்திற்கு முன் ஜல்பம் – ஆம் உளரல் – அடிப்படைகள்

பொதுவாக, பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டது, கோவிலுக்கு போக சொன்னார், போனேன், அர்ச்சனை செய்தேன், ஒரு மந்திரத்தை சொல்ல சொன்னார்கள், சொல்லிக் கொண்டுமிருக்கிறேன், அப்படி விஷேஷமாக எதுவும் நடக்கவில்லை என்பதே!

அவர்களுக்கும், தத்துவத்தை எளிதாக சொல்வதற்கும் இக்குறிப்பு:

மந்திரங்கள் என்பது ஒலி அலைகள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே! ஆயின் அவை எவ்வாறு மனிதனின் உடலில், உள்ளத்தில், சுற்றுசூழலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை சிறிது பார்ப்போமா!

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை கவனியுங்கள்.

சக்கிரஙகள் - அடிப்படை

ஈரேழு பதினாலு உலகம் என புராணங்கள் கூறுவது எதை?  கூர்ந்து கவனித்தீர்கள் எனில், மூலாதார சக்ரம், அல்லது பூமி தத்துவம் என்பது ஒரு மனிதனின் ஆசன வாயிற்க்கும் இந்திரிய உறுப்புக்கும் நடுவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை குறிப்பிட்டே, பத்மாஸனத்தில் இருந்து ஜெபம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அப்பொழுது தான் மூலாதாரம் தூண்டப்படும் – இதை சிறிது அலசுவோமா!

ஒரு மனிதன் நிற்கும் பொழுது, அவனது மூலாதாரம், சுமார் 2 ½ அடி உயரத்தில் உள்ளது. மூலாதாரம் என குறிப்பிட்ட பகுதிக்கும், பூமிக்கும் நடுவே உள்ள தூரத்திலேயே, அதள, விதள, சுதல தலாதள, ரசதள, மஹா தள, பாதாளம் எனும் 7 லோகங்கள் உள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கால் விரல் நுனியிலிருந்து, மூலாதாரம் வரை.

அடுத்ததாக, மூலாதாரத்திலுருந்து ஏன் ஆரம்பிக்க வேண்டும்? என்பது.

இன்றைய விஞ்ஞானம், நேற்றைய கூற்றை உரைக்கிறது. ஒருவர் வலது கை பழக்கம் உள்ளவர் எனில், அவரது இடது மூளை, சிறிது அதிகமாக பணியெடுக்கிறது, இடது கையெனில், வலது மூளை சிறிது அதிகமாக பணியெடுக்கிறது என்று.

நமது முன்னோர்கள், இதற்கு ஓரு படி மேலே போய், உடலையும், உயிரையும், மூளையையும், மனத்தையும் இயக்கும் முறையை ப்ராணாயாமம் என்று உறைத்து, அதன் மூலம் மூலாதாரத்தில் உயிர் நிலையை இயக்கும் மர்மத்தினை நாடி-சுத்தி என்று அழைத்தனர். இதன் ரகசியமாவது, ப்ராணாயாமம் ஆரம்பமாவது, காலியான நுறை ஈரலில், அதாவது மூச்சை முழுவனுமாக வேளியே விட்டு, இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சிறிது நிறுத்தி, வலது நாசி வழியாக வெளியே விடவும் என்றும், பின்னர், வலது நாசி வழியாக உள்ளே இழுத்து பின் இடது நாசி வழியாக வெளியே விட்டால் ஒரு சுற்று என்றும், ஒரு சாதகன் இம்மாதிரி 21 சுற்று நாடி சுத்தி செய்த பின்னரே, மற்ற விதிக்கப்பட்ட அனுஷ்டான முறைகளை அனுசரிக்க வேண்டும் என்றனர்.  இப்படி செய்யும் பொழுது, சில சொற்தொடரையும் சேர்த்து செய்யப்பணித்தனர்.  இதன் பயனானது, உடலில், ப்ராணவாயு அதிகம் சேரவும், கரியமில வாயு அல்லது, மனிதனின் ரத்தத்தில் கலந்து, காற்றோடும், சிறு நீரகத்தாலும், வெளியேற்றப்படும் மலினங்கள் சுலபமாக வெளியேற்றப்பட்டு, உடலில் உள்ள ரத்தம் சுத்தீகரிக்கப்படுகிறது.  மேலும், மூச்சை ஒரே சீறாக இழுத்து வெளியே விடுவதின் மூலம், வயிற்றுப்பகுதி அசைந்து கொடுப்பதால், வயிற்றில் உள்ள மலினமும் எளிதாக வெளியேற்றப்படுகிறது.  ப்ராண வாயு நிறைந்த ரத்தத்தினால் இதயத்தின் வேலை குறைக்கப்படுகிறது, அதன் காண், இதயம், மெதுவாக, அதே சமயம் முழுவதுமாக தனது கடமையை செய்கிறது.  காரணம், வயிற்றின் மலினமும், வயிற்றில் உள்ள காற்றும் கொடுக்கும் மேல் அழுத்தம் குறைவதாலும்.  இதனோடு, மூளைக்கு செல்லும் ரத்தம் அதிகமான ப்ராணவாயுவுடன் பாய்வதால், மூளைக்கு வேண்டிய ஆகாரம், சிறிது ரத்த ஓட்டத்திலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.  ஆகையால், மூளையும் அமைதியாக, தனது பணியை செவ்வனே செய்கிறது.

இவ்வகையாக நமது உடலின் இடா, பிங்களா, சுஷும்னா ஆகிய நாடிகள், சுத்தீகரிக்கப்படுகின்றது.

இப்படியாக, நமது அனுஷ்டானத்திற்கு முன், ஸ்தூல உடல் சுத்தீகரிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விஸ்தாரமாக பின்னர் உரைக்கப்படும்

—தொடர்கிறது

சுபம்

Advertisements

One thought on “ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் | JALPAM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s